
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத வரியை ரத்து செய்யும். பரஸ்பர வரியை குறைக்கும், என டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Swipe up
முழு விவரம்
உங்கள் வாழ்க்கையை ஐந்து ஆண்டுகளுக்கு, 5,000, 10,000 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு விடாதீர்கள்; ஓட்டு போடாமல் வீட்டில் இருப்பது தேசத் துரோகம் என சென்னையில் மநீம நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கமல் பேசினார்.
Swipe up
முழு விவரம்
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 15 லட்சம் புதிய வாக்காளர்கள் சே ர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சிகளிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தானேயில் தான் அதிகம்.
Swipe up
முழு விவரம்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 46. அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Swipe up
முழு விவரம்
வங்கியில் 200 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பாக, சென்னை மற்றும் ஹைதராபாதில், சசிகலாவின் பினாமி வீடு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
Swipe up
முழு விவரம்
பிற நாட்டினர் பிரிட்டனில் குடியேறுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுங்கள். தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள் என பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். சமீபத்தில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி நடந்தது.
Swipe up
முழு விவரம்
அதானிக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை, என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம்( செபி) தெரிவித்துள்ளது. இதனையடுத்து பொய் பரப்பியவர்கள் மன்னிப்பு கேட்க அதானி வலியுறுத்தல்
Swipe up
முழு விவரம்
போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு என சந்தேகப்படும் இந்தியாவைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க நமது நாட்டிற்கான அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
Swipe up
முழு விவரம்
இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.7 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், இதில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது.
Swipe up
முழு விவரம்
பல்வேறு புதுமைகள் படைக்கப்பட்டு வரும் ஜப்பானில் அடுத்த கட்ட முயற்சியாக பிராந்திய கட்சி ஒன்றின் தலைவராக ஏஐ நியமனம் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது முதல், எத்தனை நாட்கள் இந்தப் பதவியில் இருக்கும் என்ற தகவல் வரும் காலங்களில் முடிவு.
Swipe up
முழு விவரம்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு சென்றுள்ளார். உலக மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்பின் முயற்சிகளை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பாராட்டி உள்ளார்.
Swipe up
முழு விவரம்
உத்தரபிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓநாய் தாக்குதலால் சிறுமியர் இருவர் பலியாகினர். 9 பேர் காயமடைந்ததுள்ளனர். இந்த சம்பவங்கள் காரணமாக கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஓநாயை பிடிக்க நடவடிக்கை.
Swipe up
முழு விவரம்
விஷ்ணு சிலை விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, நான் கூறியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன், என்றார்.
Swipe up
முழு விவரம்
தாய்லாந்து ராணுவ வீரர்கள் கண்ணீர் புகைகுண்டுகளையும், ரப்பர் புல்லட்களை வீசி தாக்குதல் நடத்தியதில் கம்போடியாவைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் புத்த மதத்துறவிகள் 29 பேர் காயமடைந்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.
Swipe up
முழு விவரம்
திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? என விஜய்யை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் கடுமையாக சாடியுள்ளார்.
Swipe up
முழு விவரம்
ஓட்டுத் திருட்டு எனக்கூறி வரும் ராகுல், ஊடுருவல்காரர்களை பாதுகாத்து வருகிறார். அவர்களுக்கு ஓட்டுரிமை, ரேசன் கார்டு ஆகியவற்றை வழங்க வேண்டுமா, என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
Swipe up
முழு விவரம்
அவிநாசி அடுத்த கருவலூரில் 1800 ஆண்டுகள் பழமையான கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் சூரிய ஒளி பெருமாள் மீது விழுந்தது.
Swipe up
முழு விவரம்
ரூ.60 கோடி மோசடி வழக்கில் நடிகைகள் நேஹா துபியா, பிபாஷா பாசுவை விசாரிக்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது விசாரணை நடக்கிறது.
Swipe up
முழு விவரம்
நேபாள அரசின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி உடன் நமது பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்புவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றார்.
Swipe up
முழு விவரம்
தமிழகத்தில் நான் தான் இளிச்சவாயன். நான் எம்எல்ஏ கிடையாது. எம்பி கிடையாது. பஞ்சாயத்து தலைவர் கிடையாது. மக்களின் வரி பணத்தில் ஒரு ரூபாய் சம்பளம் கிடையாது. வருடம் வருடம் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவேன்- அண்ணாமலை
Swipe up
முழு விவரம்
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Swipe up
முழு விவரம்
நாட்டின் வாக்காளர்களை ராகுல் அவமதித்து விட்டார். மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள், என்று பாஜ தெரிவித்துள்ளது. மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள் எனக் கூறியது
Swipe up
முழு விவரம்
ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்; 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம். வயோமித்ரா என்ற இயந்திர மனிதரை விண் ஏவூர்தியில் அனுப்ப முடிவு: நாராயணன்
Swipe up
முழு விவரம்
ஓட்டு திருட்டு என்ற பெயரில் ராகுல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு,அடிப்படை ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், எந்தவொரு ஓட்டும் நீக்கப்படமாட்டாது, என விளக்கம்
Swipe up
முழு விவரம்
மதுரை கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் சாமுவேல் மனோகரன். இவர் டெக்ஸ்டைல் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கணேசனை லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
Swipe up
முழு விவரம்
உள்துறை அமைச்சரை சந்திக்க அரசுக்கு சொந்தமான காரில் தான் சென்றேன். அமித்ஷாவின் வீட்டில் இருந்து வெளியே வரும் போது என் முகத்தை துடைத்தேன். அதை அரசியல் செய்கிறார்கள். இது வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது: இபிஎஸ்
Swipe up
முழு விவரம்
திருநெல்வேலி டவுனில் டூவீலர் ஒட்டியவர் மீது காரை மோதி நீண்ட தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., காந்திராஜனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்திரவிட்டார்.
Swipe up
முழு விவரம்
ஓட்டு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் முதலில் நிறுத்த வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார். ஓட்டு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.