மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கும் டிரம்ப்; பிரிட்டன் மன்னர் சார்லஸ் பாராட்டு
மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கும் டிரம்ப்; பிரிட்டன் மன்னர் சார்லஸ் பாராட்டு
ADDED : செப் 18, 2025 06:59 PM

லண்டன்: உலக மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்பின் முயற்சிகளை பிரிட்டன் மன்னர் சார்லஸ் பாராட்டி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உற்சாக வரவேற்பு அளித்தார். வின்சோர் கோட்டைப் பகுதியில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோரை மன்னர் மூன்றாம் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார். டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு சார்லஸ் குடும்பத்தினர் விருந்து அளித்தனர்.
பின்னர் பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியதாவது: உலக மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். இது பாராட்டுக்குரியது. உக்ரைனுக்கு ஆதரவாக நாங்களும் எங்கள் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்கிறோம். உலகின் மிகவும் தீர்க்க முடியாத சில மோதல்களுக்கு தீர்வுகளைக் கண்டறிவதில் டிரம்ப் சிறப்பாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் விருந்து அளித்த சார்லஸ் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது: அரசு முறைப் பயணத்தின் போது, வரவேற்கப்படும் முதல் அமெரிக்க அதிபராக இருப்பது தனித்துவமான பாக்கியம். இது எனது வாழ்க்கையில் கிடைத்த கவுரவங்களில் ஒன்றாகும். அமெரிக்கா- இங்கிலாந்து இடையே உள்ள உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. இவ்வாறு டிரம்ப் கூறினார்.