sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மேஷம்

/

மேஷம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

மாத ராசி பலன் : மேஷம்
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

மேஷம்

மேஷம்

அசுவினி: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் வாழ்க்கையில் புதிய பாதையைக் காட்டும் மாதமாக இருக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டம் எல்லாம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். செப். 28 வரை புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வழி வேலைகள் ஆதாயம் தரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அதனால் உண்டாகக் கூடிய விளைவுகள், லாபம் நஷ்டம் பற்றி நன்றாக அறிந்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை தேவைப்படும். பூர்வீக சொத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருப்பதால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். இக்காலத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வதால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: செப். 26, 27.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 25, அக். 7, 9, 16.
பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

பரணி
செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன் அக். 10 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளரின் ஒத்துழைப்பால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். பூர்வ புண்ணியாதிபதியின் சஞ்சாரமும், யோகக்காரகன் ராகுவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வம்பு, வழக்கு முடிவிற்கு வரும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சேமிப்பு உயரும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும் சப்தம ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 27, 28.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24. அக். 6, 9, 15
பரிகாரம் தில்லை காளியை வழிபட தொல்லைகள் விலகும்.

கார்த்திகை 1 ம் பாதம்
எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம், புத ஆதித்ய யோகத்துடனும், குரு மங்கள யோகத்துடனும் பிறப்பதால் உங்களுக்கு நன்மையான மாதமாகும். மாதம் முழுவதும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வழக்கு, விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். எடுத்த வேலைகளை சரியான சமயத்தில் முடிக்கும் நிலை உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடையக்கூடிய நிலை உண்டாகும். பிறருக்கு உதவி செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப். 28.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 19, 27. அக். 1, 9, 10.
பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us