மாத ராசி பலன்
மாத ராசி பலன் : கன்னி
10 ஏப் 2026
முந்தைய மாத ராசி பலன்

கன்னி
கன்னி
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்
நினைத்ததை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை வெற்றிமேல் வெற்றியடைந்து வந்த உங்களுக்கு, இனி அந்த நிலை மாறும். எடுக்கும் வேலைகளில் தடையும், தாமதமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும். நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும். குடும்பத்திலும் கணவன், மனைவிக்குள் சிறு சிறு சச்சரவுகள் உண்டாகும். அதனால் இருவருக்கும் இடைவெளி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நிதானம் காப்பது நல்லது. விரயாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இந்த மாதத்தில் கூடுதல் நெருக்கடிகளை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் என்பது இல்லாமல் போகும். மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும். எடுத்தோம் முடித்தோம் என்று எந்தவொரு வேலையையும் முடிக்க முடியாமல் இழுபறியாகும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறக்கூடிய நிலை உருவாகும். உடலிலும் அவ்வப்போது ஏதாகிலும் சிறு சங்கடங்கள் தோன்றும் என்றாலும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களைப் பாதுகாப்பார். நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பார். நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றுவார். எதிர்ப்பு வம்பு வழக்கு என்ற நிலைகளில் வெற்றியை ஏற்படுத்துவார். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஏப். 17.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 19, 23, 28. மே 1, 5, 10, 14.
பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.
அஸ்தம்
எதையும் அலசி ஆராய்ந்த பிறகு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 23 வரை ராசிநாதன் புதன் நீச்சம் அடைந்திருப்பதால் உங்கள் கவனம் சிதறும். எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு நடத்த முடியாமல் போகும். என்றாலும் ஏப். 23 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் நிறைந்த செல்வங்களையும் நிம்மதியினையும் உங்களுக்கு வழங்குவார். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யவும், புதிய சொத்து வாங்குவதற்காகவும் வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்குவரும். சிலர் புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குரு 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்படுவதும், மேலதிகாரியை அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். குருவின் பார்வைகள் தன குடும்ப வாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், சத்ரு ஜெய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் மலையளவு சங்கடங்கள் வந்தாலும் வந்த வழியே போய்விடும். எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலைஏற்படும். குடும்பப் பிரச்னைகள் விலகும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்பதெல்லாம் முடிவிற்கு வரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இந்த வழக்கு விவகாரங்கள் முடிவிற்கு வரும். உறவினர்களுடன் இணக்கமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய நிலை ஏற்படும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். கையில் பணம் புரளும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்விக்குரிய வழி பிறக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 18.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 20, 23, 29. மே 2, 5, 11, 14.
பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்
சிந்தித்து செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவானுடன், மே 10 வரை உங்கள் சகாய ஸ்தானாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் இனம்புரியாத குழப்பத்தை ஏற்படுத்தும். வேலைகளில் தாமதம் ஏற்படும். தவறானவர்களின் அறிமுகம் ஏற்பட்டு அவர்கள் காட்டும் வழியில் சென்று சிலருக்கு சட்ட சிக்கல்களும் ஏற்படும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட்டு நல்ல நட்புகளையும் இழக்க வேண்டிவரும். வாழ்க்கைத் துணையுடனும் சண்டை சச்சரவு அதிகரிக்கும். மே 10 முதல் செவ்வாய் அஷ்ட ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில், உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட வேண்டாம். இந்த இக்கட்டான நேரத்தில் தன குடும்பாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால், எத்தனை நெருக்கடி வந்தாலும் வசதி வாய்ப்புகள் உண்டாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். அரசியல்வாதிகள் தடாலடியாக செயல்பட்டு உங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பீர்கள். அதனால் சில சங்கடங்களும் ஏற்படும் என்றாலும், யோகக்காரகன் ராகு சத்ரு, ஜெய ஸ்தானத்தில், குரு பார்வையுடன் சஞ்சரிப்பதால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதுபோல் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையிலும் ஒரு நன்மையும் இருக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். ராசிநாதன் புதன் ஏப். 23 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் கூடும். தொழில் முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு எதிர்காலம், மேற்கல்வி பற்றிய எண்ணம் உருவாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 19.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 18, 23, 27. மே 5, 9, 14.
பரிகாரம்: அனுமனை வழிபட சங்கடங்கள் நீங்கும். நன்மை உண்டாகும்.