/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி - நவாக்க்ஷரி ஹோமம்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி - நவாக்க்ஷரி ஹோமம்
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி - நவாக்க்ஷரி ஹோமம்
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி - நவாக்க்ஷரி ஹோமம்
செப் 25, 2025

புரட்டாசித் திங்கள் ஆறாம் நாள் 22.09.2025 முதல் 02.10.2025 வரை சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நாட்களில் தினமும் காலையில் நவாக்க்ஷரி ஜெபம் - ஹோமம் மற்றும் சப்தசதி என அழைக்கப்படும் 700 ஸ்லோகங்களை 10 முறை பாராயணம் செய்து அதை ஒருமுறை ஹோமம் செய்வது நவசண்டி மஹா யாகத்தின் சிறப்பாகும். மாலையில் கொலுவில் ஸ்ரீ அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும்போது விசேஷ வழிபாடுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த அற்புத நிகழ்வில் பக்தர்கள் பெருமளவில் பங்கு பெற்று ஸ்ரீ மூகாம்பிகையின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலயம் அன்புடன் அழைக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
01.10.2025 காலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது. 7.30 மணிக்கு பூர்ணாஹீதி - தீபாராதனையும் 8 மணிக்கு சரஸ்வதி பூஜை கொலு மண்டபத்திலும் நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும். இரவு 09.30 மணிக்கு 64 யோகினி 64 பைரவர் பலி தான வழிபாடு . 02.10.2025 7 மணிக்கு யாக பூஜை தொடங்குகிறது. 8 மணிக்கு அத்யாய ஹோமம் - 10 மணிக்கு கோ மாதா பூஜை - சுமங்கலி பூஜை - கன்யா பூஜை - பிரம்மச்சாரி பூஜை நடைபெறும். 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம். 11 மணிக்கு சௌபாக்கிய திரவிய சமர்ப்பணம் - 12 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும்.இரவு 7 மணிக்கு ஸ்ரீ அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று சர்வ அலங்கார நாயகியாக எழுந்தருளி ஆலயம் வலம் வந்து அருள்பாலிப்பார். இத்தகு விசேஷ நிகழ்வுகளில் பங்கேற்று வாழ்க்கைக்குரிய சகலவித சௌபாக்கியங்களையும் சகலவித ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழுமாறு ஆலய மேலாண்மைக் குழுவினரும் அர்ச்சகர்களும் அன்புடன் அழைக்கிறோம்.
நவராத்திரி மூன்றாம் நாள் விழா கோலாகலம்
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் அம்பாளின் அலங்காரத்திற்கென்றே பக்தர்களைத் திரளாக வருவிக்கும் ஆற்றல் பெற்ற தலம். நவ ராத்திரி எனில் அலங்காரங்களும் - கலை நிகழ்ச்சிகளும் பல் வண்ண சுடர் விளக்குகளும் குதூகலிக்க வைக்கின்றன. மூன்றாம் நாள் நவராத்திரி நாளில் ஸ்ரீ அம்பிகை ஸ்ரீ மாரியம்மள் அவதாரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தமை கண்கொள்ளாக் காட்சியாகும் தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண நாகராஜ சிவாச்சார்யார் நாள்தோறும் இடம்பெறும் அலங்கார மகிமை பற்றி விளக்குவது பக்தர்களுக்குப் பெரு விருந்தாய் அமைகிறது. ஆலய நாதஸ்வர - தவில் வித்துவான்களின் தாள - ராக சுர - லய ஆலாபனைகள் பக்தப் பெருமக்களை மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துகின்றன. கலையரங்கில் சிங்கப்பூரின் பிரபல வித்வான்களின் பல்சுவை இசை நிகழ்ச்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. பங்குபெறும் கலைஞர்களைத் தம்பதிகளாக ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றுப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுவதும் தலைமை அர்ச்சகர் பிரசாதம் வழங்கிப் பெருமைப்படுத்துவதுவும் பாராட்டுக்குரியவை. பல்சுவை பருகி மகிழும் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் இரட்டிப்பு மகிழ்வை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின் இப்பகுதியே அருள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.
Advertisement