/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலய நவராத்திரி விழா
/
சிங்கப்பூர் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலய நவராத்திரி விழா
சிங்கப்பூர் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலய நவராத்திரி விழா
சிங்கப்பூர் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலய நவராத்திரி விழா
செப் 26, 2025

கருணையே வடிவாக தொபாயோ பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் வழக்கமான உற்சாகத்துடனும் பக்திப் பரவசத்துடனும் நவராத்திரி விழா செப்-22 வெகு விமரிசையாகத் தொடங்கியது. ஆலய வித்துவான்களின் மங்கள இசையுடன் தொடங்கிய விழா நாள்தோறும் சிங்கப்பூரின் பிரபல வாய்ப்பாட்டு - நடன - பரத நிகழ்ச்சிகளோடு சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போன்று பக்தி ரசத்தையும் பாரம்பரிய கலைகளையும் இப்பகுதி முழுதும் பரப்பி மகிழ்ச்சிப் பெருக்கை விளைவித்தது.
22 ஆம் தேதி அன்னை ஸ்ரீ காமாட்சி அம்மனாக காட்சி அளித்தார். காமாட்சி பிள்ளைகளின் உபயமிது. 23 ஆம் தேதி தேவகி குடும்பத்தினரின் ஆதரவோடு அம்மன் சிவ பூஜைக் காட்சி மிளிர்ந்தது.வாய்ப்பாட்டும் நடனமும் இடம் பெற்றன.24 ஆம் தேதி கே.சுப்பிரமணியம் குடும்பத்தினரின் நேர்த்திக் கடனில் மஹா மாரியம்மனாக அன்னை ஜொலித்தார்.
“ ஓம் சக்தி ...பராசக்தி
இன்று புல்லாங்குழல் இசை அவையோரைப் புளகாங்கிதமடையச் செய்தது.வி.கே.ஆர்.ஆர்ட்ஸ் மாணவிகளின் நடனம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தன.25 ஆம் தேதி அன்னை கஜலட்சுமியாக விஸ்வரூபமெடுக்க பக்தப் பெருமக்களின் “ ஓம் சக்தி ...பராசக்தி “ முழக்கம் விண்ணதிரச் செய்தது.
நாள்தோறும் ஆலயத் தலைமை அர்ச்சகர் அன்னையின் தோற்றத்தைத் தத்துவார்த்தமாக ஜனரஞ்சகமாக விளக்கியமை பாராட்டுக்குரியது. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய பக்தர்களை அறுசுவை அன்னதானம் தட்டி எழுப்பியது. ஆலய மேலாண்மைக் குழுவினரும் தொண்டூழியர்களும் அரங்கம்நிறை பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் குறைவறச் செய்திருந்தனர்--- சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.
Advertisement