sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மஹா சுதர்ஷன தனகர்ஷன குபேர லட்சுமி யாகம்

/

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மஹா சுதர்ஷன தனகர்ஷன குபேர லட்சுமி யாகம்

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மஹா சுதர்ஷன தனகர்ஷன குபேர லட்சுமி யாகம்

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மஹா சுதர்ஷன தனகர்ஷன குபேர லட்சுமி யாகம்


செப் 27, 2025

Google News

செப் 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் செப்டம்பர் 13 . 14 தேதிகளில் மஹா சுதர்ஷன தனகர்ஷன குபேர லட்சுமி யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மகா சுதர்ஷன மந்திரம் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். .இது விஷ்ணுவின் வெளிப்பாடான சுதர்ஷனாவுக்கு அர்ப்பணிக்கப்படுவது. மஹா சுதர்ஷன மந்திரம் ஒருவர் வெற்றி அடைய உதவுவதோடு அந்நபரை நிறைவான நிலையை உணரவும் செய்கிறது.
துரதிர்ஷ்டம் உடல் நலம் மற்றும் நிதி சிக்கல்களிலிருந்து இது விடுவிக்கிறது. சுதர்சன பகவான் விஷ்ணுவின் வெளிப்பாடு. அவர் தமது பின்புற வலது கையில் சுதர்ஷன சக்கரத்தை வைத்திருக்கிறார். அவரது மூன்று கைகளிலும் சங்கு - தாமரை மலரையும் வைத்துள்ளார்.ஸ்ரீ விஷ்ணு பகவான் சுதர்ஷன சக்கரத்தை வைத்திருக்கும் போது அவர் சுதர்ஷனராகவும் வணங்கப்படுகிறார்.
விஷ்ணு பகவானும் தமது பக்தர்களின் துயரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். தமிழில் அவர் சக்கரத்தாழ்வார் என வழிபடப்படுகிறார். சுதர்ஷன ஹோமம் மற்றும் மஹா சுதர்ஷன மந்திரத்தின் முக்கிய தெய்வமும் இவரே.தெய்வீக தரிசனம் எனவும் கூறப்படுகிறது.இது முக்தி அடையும் பாதையைத் தெளிவுபடுத்துகிறது. சுதர்ஷன சக்கிரத்தில் 108 கத்திகள் உள்ளன. கத்திகள் தீமையை அகற்றுகின்றன.ஸ்ரீ விஷ்ணுவின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த சக்கரம் மிகச் சக்தி வாய்ந்தது. அக்னி பகவானின் அம்சமாக விளங்குகிறது. வைஷ்ணவர்களின் மரபுப்படி சுதர்ஷன சக்கரம் விஷ்ணுவின் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல வழிபாட்டிற்கும் உகந்ததாகும்.

நன்மைகளை அளிப்பதோடு வெற்றியையும் தருகிறது.எதிரிகளை அழிப்பதோடு தர்மத்தின் காவலராகவும் திகழ்கிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் சகல நன்மைகளையும் வாரி வழங்குகிறது. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆசிர்வாதத்தைப் பெறவும் உதவுகிறது.
இத்தகு சிறப்பு வாய்ந்த யாகத்தை ஸ்ரீ ராமர் கோயிலில் மண்டபம்நிறை பக்தர்களைக் கொண்டு இத்துறையில் விற்பன்னரான தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் பக்திரசம் நிரம்பி வழிய மேற்கொண்டார். முன்கூட்டியே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் பங்கேற்றனர் ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

---சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us