sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/மொபைல்போன் கதிர்வீச்சு பயன்படுத்துவதில் கவனம்

மொபைல்போன் கதிர்வீச்சு பயன்படுத்துவதில் கவனம்

மொபைல்போன் கதிர்வீச்சு பயன்படுத்துவதில் கவனம்

5


ADDED : மே 17, 2026 01:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 01:34 PM

5


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொபைல்போன்கள் இன்றைய உலகில் ஒரு அத்தியாவசிய 'கருவியாகி' யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், மொபைல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது. ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும்.

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது சிறந்தது. கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு, 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே நாம் மொபைல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

முடிந்த அளவு மொபைல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். 'லேண்ட்லைன்' உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் மொபைல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவும். ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் SMS வசதியை உபயோகிக்கவும். குழந்தைகளிடம் மொபைல்போன்களில் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

உங்கள் மொபைல்போனில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம். காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட மொபைல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

துாங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு துாங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஏற்படுத்தியவுடன் போனை காதின் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் ரிங் போகும் பொழுது, 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது. மொபைல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

மொபைல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மொபைல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us