sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்

பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்

பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்


ADDED : மே 17, 2026 01:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 01:31 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் என பலவிதமான ஊட்டச்சத்துக்கள் தேவை. இவற்றை பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் நாம் சுலபமாக பெறலாம். இந்தவகையில், பீட்ரூட்டில் இருக்க கூடிய நன்மைகள் என்ன என்பதை குறித்து காணலாம்.

பீட்ரூட் என்பது வேரிலிருந்து உருவாக கூடிய காய்கறி. பீட்ரூட்டின் சிவப்பு நிறம் பீட்டாலைன்ஸ் எனப்படும் சிவப்பு நிறமிகளால் ஏற்படுகிறது. பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

பீட்ரூட் சாற்றில் பொதுவாக அதிகளவு நைட்ரேட்டுகள் இருக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்து, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

பீட்ரூட், ஜூஸ், பொறியல், பச்சையாக என எந்த வகையிலும் உட்கொள்ளலாம். குறிப்பாக ஜூஸாக குடிப்பவர்களுக்கு தசையின் வலிமை அதிகரிக்கிறது.

பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் இல்லாமலும் இருப்பதால், ஒரு நாளின் தொடக்கத்தில் இதனை எடுத்து கொள்ளும் போது, அதிக உணவை உட்கொள்ளாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

தினமும் பச்சையாக பீட்ரூட்டை சாப்பிடும் போது, ரத்த சோகை போன்றவற்றை கையாள பயனுள்ளதாக இருக்கும்.

இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்கள் இதய ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. பீட்ரூட்டில் உள்ள பீட்டானின் என்ற வேதிப்பொருள், உடலில் ஆக்ஸிஜனேற்ற புரதங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இந்த புரதங்கள் கல்லீரல் உயிரணுக்களுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

பீட்ரூட்டின் மூலமாக பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் இருக்கும் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது. மேலும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் தீர்வாக அமைகிறது.

பீட்ரூட்டில் உள்ள நச்சு நீக்கும் பண்பு முகத்தில் பருக்கள் போன்ற பிரச்னை ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவி புரியும்.

மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள், வைட்டமின்கள் சருமத்திற்கு பொலிவையும், ஆரோக்கியத்தையும் உண்டாக்கும். பீட்ரூட் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, உடலில் உள்ள தசைகளுக்கு ஆக்சிஜன் சரியாக சென்று சேருவதற்கும் உதவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us