Advertisement

Follow us
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

Advertisement

/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை நீதிபதியிடம் பட்னவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி

/

தலைமை நீதிபதியிடம் பட்னவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி

தலைமை நீதிபதியிடம் பட்னவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி

தலைமை நீதிபதியிடம் பட்னவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி

ADDED : மே 20, 2025 06:24 AM

Google News

ADDED : மே 20, 2025 06:24 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், முதன்முறையாக நேற்று முன்தினம் மும்பை சென்றார்.

பதவி ஏற்ற பிறகு, முதன்முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு மாநிலத்திற்கு செல்லும்போது, அம்மாநில தலைமைச் செயலர், டி.ஜி.பி., மாநகர போலீஸ் கமிஷனர், மாநிலத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டும்.

ஆனால், மும்பை சென்ற தலைமை நீதிபதியை வரவேற்க, உயர் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. இதை அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கவாய்க்கு இழைக்கப்பட்ட அவமரியாதை, நாடெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின், உணர்வுகளை பாதிக்கும்.

மஹாராஷ்டிர முதல்வர் பட்னவிஸ், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை சந்தித்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement