ADDED : செப் 23, 2025 08:00 AM

கர்நாடகாவில் இரண்டாம் முறையாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கி உள்ளது. அடுத்த 15 நாட்களில் இந்த பணிகளை முடிக்க, கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் சமூக நீதிக்கு எதிரான தி.மு.க.,வின் துரோகம் தொடர்கிறது.
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்ட கருணாநிதி, அவரது பதவிக்காலம் முடியும் வரை நடத்தாமல், துரோகம் செய்தார். கர்நாடகாவில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் மதுசூதன் நாயக் பரிந்துரைப்படி தான், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இப்படி ஒரு பரிந்துரையை அனுப்பலாம் என்ற உணர்வுகூட இல்லாமல், ஆணையம் உறங்கிக் கொண்டிருக்கிறது.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, சட்டம், நிதி, பணியாளர்கள் தடையில்லை; ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளது.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,