ADDED : செப் 23, 2025 08:02 AM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்தபோது, அவர் தன்னிடம் கூறிய விஷயங்களை, டில்லியில் நேற்று, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம், மாநிலத் தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், நேற்று மாலை சென்னையில் இருந்து டில்லி சென்றார். பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டாவை நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அடுத்த மாதம் முதல், மாநிலம் முழுதும் நாகேந்திரன் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார். இதை, தேசியத் தலைவர் நட்டாவிடம் தெரிவித்து, ஒப்புதல் பெற்றார் நாகேந்திரன்.
சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசியபோது, அவர் கூறிய விஷயங்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தலின்படி, வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.