/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பிரின்டிங் கட்டணம் வழங்க இழுத்தடிக்காதீர்' : 'டெக்பா' பொதுக்குழுவில் வேண்டுகோள்
/
'பிரின்டிங் கட்டணம் வழங்க இழுத்தடிக்காதீர்' : 'டெக்பா' பொதுக்குழுவில் வேண்டுகோள்
'பிரின்டிங் கட்டணம் வழங்க இழுத்தடிக்காதீர்' : 'டெக்பா' பொதுக்குழுவில் வேண்டுகோள்
'பிரின்டிங் கட்டணம் வழங்க இழுத்தடிக்காதீர்' : 'டெக்பா' பொதுக்குழுவில் வேண்டுகோள்
ADDED : செப் 27, 2025 12:21 AM

திருப்பூர்; 'பிரின்டிங் நிறுவனங்களுக்கான ஜாப்ஒர்க் கட்டணங்களை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்,' என, டெக்பா பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) 21வது பொதுக்குழு கூட்டம், இடுவம்பாளையத்திலுள்ள சங்க அரங்கில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் மரிய விக்டர் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் திருமூர்த்தி, வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார். 'தொழில் வளர்ச்சி' என்ற தலைப்பில், பாரதி சுப்பராயன் பேசினார்.
தீர்மானங்களை விளக்கி சங்க தலைவர் ஸ்ரீகாந்த் பேசியதாவது:
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கட்டண தொகைகளை, 45 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என அரசு விதிமுறை வகுத்துள்ளது. திருப்பூரில், பிரின்டிங் கட்டணங்களை வழங்க, நிறுவனங்கள் இழுத்தடிக்கின்றன. இதனால், எங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அரசு விதிமுறைப்படி, பிரின்டிங் கட்டணங்களை 45 நாட்களுக்குள் வழங்கி, உற்பத்தி சங்கிலியில் குறு, சிறு நிலையில் உள்ள ஜாப்ஒர்க் துறையின் வளர்ச்சிக்கு கைகொடுக்க வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளில் 'டெக்பா' வெள்ளிவிழா கொண்டாட உள்ளது. துணை குடியரசு தலைவர் சி.பி., ராதாகிருஷ்ணனை அழைத்து, சங்க வெள்ளிவிழாவை கோலாகலமாக நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். சங்க துணை தலைவர் இதயத்துல்லா நன்றிகூறினார்.