/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரியூட்டு மயான பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு
/
எரியூட்டு மயான பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு
எரியூட்டு மயான பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு
எரியூட்டு மயான பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு
ADDED : செப் 27, 2025 12:20 AM

பல்லடம்; எரியூட்டு மயான பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள், பல்லடம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பல்லடம், பச்சாபாளையம் பகுதியில், 2 கோடி ரூபாய் மதிப்பில் எரியூட்டு மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்த பொதுமக்கள் கூறியதாவது:
எங்களின் எதிர்ப்பை மீறி நீரோடைக்குள் எரியூட்டு மயானம் கட்டப்பட்டது. தற்போது, இந்த மயான பராமரிப்பை தனியாருக்கு ஒப்படைக்க உள்ளதாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு சார்பில் எரியூட்டு மயானத்தை கட்டிவிட்டு, எதற்காக தனியாருக்கு வழங்க வேண்டும். இப்பகுதியில், எரியூட்டு மயானமே வேண்டாம் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பணம் பறிப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. எனவே, நியாயமான கட்டணத்தை மட்டுமே விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.