/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு! அரசு மானியத்துடன் வீடுகளில் சோலார் அழைப்பு விடுக்கிறார் செயற்பொறியாளர்
/
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு! அரசு மானியத்துடன் வீடுகளில் சோலார் அழைப்பு விடுக்கிறார் செயற்பொறியாளர்
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு! அரசு மானியத்துடன் வீடுகளில் சோலார் அழைப்பு விடுக்கிறார் செயற்பொறியாளர்
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு! அரசு மானியத்துடன் வீடுகளில் சோலார் அழைப்பு விடுக்கிறார் செயற்பொறியாளர்
ADDED : செப் 27, 2025 12:24 AM

திருப்பூர்: ''ஒரு கிலோவாட்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் மானியத்துடன், வீடுகளில் சோலார் நிறுவலாம்,'' என, திருப்பூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
மத்திய அரசின், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சார்பில், 'பிஎம் சூர்யஹார்' என்ற, சூரியவீடு இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சோலார் கட்டமைப்பு நிறுவ, அரசு மானிய உதவி கிடைப்பதால், முன்னணி வங்கிகளும், கடனுதவி செய்யவும் முன்வந்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், இதுதொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மின்பகிர்மான வட்டம், திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர், சோலார் நிறுவனங்கள், வங்கியாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று அவிநாசி ரோட்டிலுள்ள லுாகாஸ் சர்ச் மண்டபத்தில்நடந்தது. உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
சூரிய வீடு
இலவச மின்சார திட்டம் குறித்து கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''வீடுகளுக்கு சோலார் அமைக்க, கிலோ வாட்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய், 2 கிலோவாட்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய், 3 கிலோவாட்டுக்கு, 78 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். மானிய தொகை விடுவிக்கப்படும். ஒரு கிலோவாட் சோலார் பேனல் அமைத்தால், தினமும் நான்கு முதல் 5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்து, குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்பப்பெறலாம். சோலார் மின்சக்தியை பயன்படுத்தியை போக இருப்பு வைத்து, அடுத்த மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்தலாம்,'' என்றார்.
சொந்த வீட்டுக்கு சோலார்
கனரா வங்கி மேலாளர் அம்பிகாவதி பேசுகையில்,''வீடுகளுக்கு, மூன்று கிலோவாட் சோலார் அமைக்க, இரண்டு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்; அதில், உரிமையாளர், 10 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். சொந்தமாக வீடு இருக்க வேண்டும். சொத்துவரி, மின் கட்டண ரசீது கொடுத்து, கடன் பெறலாம். நிறுவனங்களுக்கு, 3 கிலோவாட் முதல், 10 கிலோவாட் வரை சோலார் அமைக்க, ஆறு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்,'' என்றார்.
தொடர்ந்து, சோலார் திட்டம் தொடர்பான, மின்நுகர்வோர்களின் சந்தேகங்களுக்கு, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் சோலார் நிறுவனத்தினர் விளக்கம் அளித்தனர்.