Advertisement
/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
மாநகராட்சி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 19, 2025 02:55 AM

மதுரை: மதுரை மாநகராட்சியுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்படும் 'அவர் லேண்ட்' நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பிரிவு தொழிலாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சி.ஐ.டி.யு., மாநகராட்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,துாய்மை பணியாளர் மேம்பாட்டு இயக்கத்தை 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தை ஒருங்கிணைத்த சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மீது பொய் புகார் கூறி 'அவர் லேண்ட்' நிறுவன அலுவலர்கள் பணி நீக்கம் செய்வது, தரக்குறைவாக பேசுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. தினக்கூலி துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.
மாநகராட்சியின் மேல்முறையீட்டை திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி பொறியியல் பிரிவில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பணி நேரத்தை குறைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு ஓய்வறை வசதி வேண்டும். மாநகராட்சி நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
மா. கம்யூ., கவுன்சிலர் குமரவேல், தொழில்சங்க நிர்வாகிகள் தங்கவேல், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement