Advertisement


Follow us
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

Advertisement

/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

/

வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ADDED : ஜூன் 04, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே, வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

வாணாபுரம் அடுத்த அத்தியூரில் செவ்வாய்க்கிழமையன்று, வாரச்சந்தை நடக்கிறது. இதில், காலை நேரத்தில் நடக்கும் சந்தையில் அதிகளவில்ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.

சாதாரண நாட்களில் பல லட்ச ரூபாய் மதிப்பிலும், பண்டிகை நாட்களில் பல கோடி ரூபாய்க்கும் கால்நடை விற்பனை நடக்கும்

இதனால், கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆடுகளை இங்கு விற்பனை செய்வர். அதேபோல பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்களும் ஆடுகளை வாங்கி செல்வர்.

இந்நிலையில் வரும், 7ம் தேதி பக்ரித் பண்டிகை என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்காக நேற்று கொண்டு வரப்பட்டன. அதேபோல், கால்நடை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.

ஆடுகளின் எடைக்கேற்ப, ரூ.15 ஆயிரம் வரை விலை நிர்ணயித்து, விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்தது.

இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Advertisement