Advertisement
ADDED : ஜூன் 09, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி புவியி-யலாளர் புவனமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை கனிம கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடத்துார் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தினர். அதன் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினார். லாரியை சோதனை செய்து போது, 2 யூனிட் மண், கடத்தியது தெரிந்தது. மண்ணோடு டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்துார் போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Advertisement