/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய டெஸ்ட் அணியில் ஜெகதீசன்
/
இந்திய டெஸ்ட் அணியில் ஜெகதீசன்
ADDED : செப் 25, 2025 04:58 PM

துபாய்: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் தமிழகத்தின் ஜெகதீசன். ஜடேஜா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அக். 2ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், அக். 10-14ல் டில்லியில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணித் தேர்வு, துபாயில் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் நடந்தது.
முடிவில், தேர்வுக்குழு தலைவர் அகார்கர், 15 பேர் கொண்ட அணியை அறிவித்தார். சுப்மன் கில் கேப்டனாக தொடர்கிறார். ரிஷாப் பன்ட் காயத்தில் இருந்து மீளாத நிலையில் துணைக் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். துவக்கத்தில் ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், 3வது வீரராக தமிழகத்தின் சாய் சுதர்சன் 23, வழக்கம் போல இடம் பெற்றனர்.
ரிஷாப்பிற்குப் பதில், தமிழக விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 29, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத அபிமன்யு ஈஸ்வரன், சிறப்பாக செயல்படாத கருண் நாயர் என, இருவருக்கும் கருணை காட்டப்படவில்லை. இவர்களுக்குப் பதில் கர்நாடக இடது கை பேட்டர் தேவ்தத் படிக்கல் 25, 20 மாதத்துக்குப் பின், சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றனர்.
தவிர இங்கிலாந்து சென்ற அணியில் இடம் பெற்ற ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், கம்ஜோஜும் சேர்க்கப்படவில்லை.
வேகப்பந்து வீச்சில் பும்ரா, இரண்டு டெஸ்டிலும் பங்கேற்க உள்ளார். இவருடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, 'ஆல் ரவுண்டர்களாக' வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் சேர்க்கப்பட்டனர். சுழலில் குல்தீப் யாதவ் மீண்டும் இடம் பிடித்தார்.
அணி விபரம்
சுப்மன் கில் (கேப்டன்), ஜடேஜா (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார், ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப்.