sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

அபிஷேக் விளாசல்... இந்தியா அசத்தல் * பைனலுக்கு முன்னேறியது

/

அபிஷேக் விளாசல்... இந்தியா அசத்தல் * பைனலுக்கு முன்னேறியது

அபிஷேக் விளாசல்... இந்தியா அசத்தல் * பைனலுக்கு முன்னேறியது

அபிஷேக் விளாசல்... இந்தியா அசத்தல் * பைனலுக்கு முன்னேறியது

2


ADDED : செப் 25, 2025 12:04 AM

Google News

2

ADDED : செப் 25, 2025 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்தியா. நேற்று நடந்த 'சூப்பர்-4' போட்டியில் 41 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அபிஷேக் சர்மா 75 ரன் விளாசினார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. காயம் காரணமாக லிட்டன் தாஸ் (பக்க வலி) விலகிக் கொள்ள, விக்கெட் கீப்பர் பேட்டர், ஜேக்கர் அலி கேப்டனாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற இவர், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியில் மெஹிதி ஹசன், டஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம் என மூன்று பவுலர்களுக்கு மாற்றாக, ரிஷாத் ஹொசைன், தன்ஜிம் ஹசன், முகமது சைபுதீன் சேர்க்கப்பட்டனர்.

சுப்மன் ஏமாற்றம்

இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. தன்ஜிம் ஹசன் வீசிய முதல் ஓவரில் பந்துகள் நன்றாக 'சுவிங்' ஆக, 3 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. அடுத்து நசும் அகமது பந்தை சுழற்றினார். 4வது பந்தில் பவுண்டரி அடித்தார் அபிஷேக். இவர் 7 ரன் எடுத்த போது, தன்ஜிம் பந்தில் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை, ஜேக்கர் அலி நழுவவிட்டார். இந்திய அணி முதல் 3 ஓவரில் 17/0 ரன் மட்டும் எடுத்தது.

நசும் அகமது வீசிய 4வது ஓவரில் சுப்மன், பவுண்டரி, சிக்சர் என விளாச, அபிஷேக் தன் பங்கிற்கு ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன் எடுக்கப்பட்டன. முஸ்தபிஜுர் வீசிய முதல் ஓவரில், அபிஷேக் 2 சிக்சர் அடிக்க, 17 ரன் கிடைத்தன. சைபுதீன் வீசிய போட்டியின் 6 வது ஓவரில் 'ஹாட்ரிக்' உட்பட அபிஷேக், நான்கு பவுண்டரிகள் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 'வேகம்' (6 ஓவர், 72/0) எடுத்தது. ரிஷாத் பந்தில் பவுண்டரி அடித்த சுப்மன், 29 ரன்னில் அவுட்டானார்.

அபிஷேக் அரைசதம்

மறுபக்கம் வேகமாக ரன் சேர்த்த அபிஷேக், 25 பந்தில் அரைசதம் எட்டினார். இத்தொடரில் தொடர்ந்து 2வது, சர்வதேச 'டி-20'ல் 4வது அரைசதம் ஆனது. மூன்றாவது வீரராக களமிறங்கிய ஷிவம் துபே, 2 ரன் மட்டும் எடுத்து 'பெவிலியன்' திரும்பினார். அபிஷேக்குடன் இணைந்தார் கேப்டன் சூர்யகுமார். சைபுதீன் பந்தில் அபிஷேக் சிக்சர் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 10.1 ஓவரில் 102 ரன்களை எட்டியது.

திடீர் திருப்பம்

போட்டியின் 12வது ஓவரை வீசினார் முஸ்தபிஜுர். முதல் பந்தை அடித்தார் சூர்யகுமார். மறுபக்கம் அபிஷேக் (37 பந்தில் 75 ரன்), துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடைசி பந்தில் சூர்யகுமார் (5), ஜேக்கர் அலியிடம் 'பிடி' கொடுத்து வெளியேறினார்.

அடுத்து ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். ரிஷாத் பந்தில் ஹர்திக் ஒரு சிக்சர் அடித்த போதும், திலக் வர்மா 5 ரன்னில் வெளியேறினார். வங்கதேச பீல்டர்களும் துடிப்பாக செயல்பட, இந்திய அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. ஒருவழியாக 22 பந்துகளுக்குப் பின், ஹர்திக் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஹர்திக் (38) அவுட்டானார். 20 ஓவரில் இந்திய அணி 168/6 ரன் மட்டும் எடுத்தது. அக்சர் (10) அவுட்டாகாமல் இருந்தார்.

குல்தீப் 'மூன்று'

வங்கதேச அணிக்கு சைப் ஹாசன், தன்ஜித் ஜோடி துவக்கம் கொடுத்தது. பும்ரா 'வேகத்தில்' தன்ஜித் (1) வீழ்ந்தார். குல்தீப் சுழலில் பர்வேஸ் (21), அக்சர் பந்தில் தவ்ஹித் (7) அவுட்டாகினர். ஷமிமை (0), வருண் போல்டாக்கினார். சைப், 36 பந்தில் அரைசதம் கடந்தார். வருண் வீசிய 16வது ஓவரில் சைப் கொடுத்த இரண்டு 'கேட்ச்' வாய்ப்புகளையும் துபே, சாம்சன் என இருவரும் நழுவவிட்டனர். மீண்டும் வந்த குல்தீப், ரிஷாத் (2), தன்ஜிமை (0) வெளியேற்ற, இந்திய அணியின் வெற்றி உறுதியானது.

மூன்று முறை தப்பிய சைப் (69), கடைசியில் பும்ராவிடம் சிக்கினார். வங்கதேச அணி 19.3 ஓவரில் 127 ரன்னில் ஆல் அவுட்டாகி தோற்றது. அடுத்தடுத்து இரு போட்டியில் வென்ற இந்தியா (4 புள்ளி), பைனலுக்கு முன்னேறியது.

வெளியேறியது இலங்கை

'சூப்பர்-4' சுற்றில் முதல் 2 போட்டியில் தோற்றது நடப்பு சாம்பியன் இலங்கை அணி. இன்னும் ஒரு போட்டி (இந்தியா, செப். 26) மீதமுள்ள நிலையில் தொடரில் இருந்து வெளியேறியது.

22 போட்டி, 58 சிக்சர்

நேற்று 5 சிக்சர் விளாசினார் அபிஷேக் சர்மா. இதுவரை 22 போட்டியில் மொத்தம் 58 சிக்சர் அடித்தார். அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில். ரெய்னாவை (78ல் 58) பின்தள்ளி, 7 வது இடத்துக்கு முன்னேறினார். முதல் 3 இடத்தில் ரோகித் (205), சூர்யகுமார் (148), கோலி (124) உள்ளனர்.

25 பந்தில்...

சர்வதேச 'டி-20'ல் 25 அல்லது அதற்கும் குறைவான பந்தில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்களில் அபிஷேக் (5) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் சூர்யகுமார் (7), ரோகித் சர்மா (6) உள்ளனர். யுவராஜ் சிங் (4), ராகுல் (3) 4, 5வது இடத்தில் உள்ளனர்.

150 விக்கெட்

சூர்யகுமாரை அவுட்டாக்கிய முஸ்தபிஜுர், சர்வதேச 'டி-20'ல் அதிக விக்கெட் சாய்த்த வங்கதேச பவுலர்களில் சாகிப் அல் ஹசனை (149) முந்தி, முதலிடம் பிடித்தார். இவர் 118 போட்டியில் 150 விக்கெட் சாய்த்துள்ளார். டஸ்கின் அகமது (99), 3வது இடத்தில் உள்ளார்.

54 பந்து... 56 ரன்

இந்திய அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 112/2 ரன் எடுத்திருந்தது. கடைசி நேரத்தில் வங்கதேச பவுலர்கள், பீல்டர்கள் கைகொடுக்க, கடைசி 9 ஓவரில் (54 பந்து), 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா (168/6) 56 ரன் மட்டும் எடுத்தது.






      Dinamalar
      Follow us