/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடரை வென்றது இளம் இந்தியா: ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது
/
தொடரை வென்றது இளம் இந்தியா: ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது
தொடரை வென்றது இளம் இந்தியா: ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது
தொடரை வென்றது இளம் இந்தியா: ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது
ADDED : செப் 24, 2025 10:29 PM

பிரிஸ்பேன்: இரண்டாவது 'யூத்' ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'யூத்' ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. பிரிஸ்பேனில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே (0) ஏமாற்றினார். பின் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்த போது சூர்யவன்ஷி (70) அவுட்டானார். வேதாந்த் திரிவேதி (26) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய விஹான் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிக்யான் (71), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.
இந்திய அணி 49.4 ஓவரில் 300 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
ஜெய்டன் சதம்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் டர்னர் (24), சைமன் பட்ஜ் (14), ஸ்டீவன் ஹோகன் (14), அலெக்ஸ் டி யங் (11) சோபிக்கவில்லை. கேப்டன் யாஷ் தேஷ்முக் (1) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஜெய்டன் டிராப்பர் (107) சதம் விளாசினார். ஆர்யன் சர்மா (38) ஆறுதல் தந்தார்.
ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவரில் 249 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஆயுஷ் மாத்ரே 3, கனிஷ்க் சவுகான் 2 விக்கெட் சாய்த்தனர்.
'சிக்சர் மன்னன்' சூர்யவன்ஷி
ஆறு சிக்சர் பறக்கவிட்ட இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி, 'யூத்' ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார். இதுவரை 10 போட்டியில், 41 சிக்சர் அடித்துள்ளார். இவர், இந்திய வீரர் உன்முக்த் சந்த் (38 சிக்சர், 21 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்தார்.