ADDED : மே 30, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
செல்லிப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
செல்லிப்பட்டு கருப்பசாமி கோவில் வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தி வந்த பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், 37, மீது வழக்குப் பதிந்து கைது சென்றனர். மணல் கடத்த பயன்படுத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
