ADDED : மே 30, 2026 11:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 12 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடுவது சம்பந்தமாக புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிரதமர் மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து வீடு தோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடத்துதல், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், துாய்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலம் முழுதும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், மாநில பொறுப்பாளர் அசோக் பாபு, தங்க விக்ரமன், மாநில துணைத் தலைவர்கள் ஜெயலட்சுமி, ஜெயக்குமார், அமாவாசை, மாநில செயலாளர்கள் புகழேந்தி, தமிழ்மாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
