UPDATED : செப் 24, 2025 08:53 PM
ADDED : செப் 24, 2025 08:49 PM

பாட்னா: '' நாடு முழுவதும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசினார்
பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: வாக்காளர் உரிமை யாத்திரையின் போது பீஹாரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றோம். அப்போது, அரசியலமைப்பு தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து விளக்கினோம். பீஹாரில் மட்டும் அல்லாமல், நாடு முழுவதும் குடிமக்களின் உரிமை பறிக்கப்படுகிறது. பார்லிமென்டில் பிரதமர் மோடி முன்னர் இரண்டு விஷயங்களை கூறினேன். ஒன்று, நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது; மற்றொன்று இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத வரம்பை அகற்றுவது என்று கூறினேன்.
இன்றும் நமது நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர், தேவையான அளவில் பங்கேற்பு இல்லை. இந்த உண்மையை அனைவரும் அறிவார்கள். நாட்டில் அவர்களின் உண்மையான மக்கள் தொகை கணக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் மொத்த எண்ணிக்கை குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் எங்களது கொள்கை. மறுபுறம் உத்தர பிரதேசத்தில் ஜாதி ரீதியில் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சிந்தனை அப்படி உள்ளது. எங்களின் சிந்தனை வேறு. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தொலைநோக்கு பார்வையை வழங்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.