முன்னாள் முதல்வரை கொன்றவருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
முன்னாள் முதல்வரை கொன்றவருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : செப் 24, 2025 09:30 PM

புதுடில்லி: கடந்த 1995 ம் ஆண்டு பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சண்டிகரில் உள்ள தலைமைச்செயலகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தார். அவருடன் மேலும் 16 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வந்த் சிங் ராஜோனா என்பவனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கடந்த 2007 ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கருணை மனு தாக்கல் செய்து இருந்தது.
கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. கடந்த ஜன., மாதம் தாக்கல் செய்த மனுவில், கருணை மனு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், தனது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அவனது மனுவில், 28.8 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அதில் 15 ஆண்டுகள் தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அஞ்சாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதாடியதாவது:மனுதாரரின் கருணை மனு மீது என்ன முடிவெடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றார்.
அதற்கு அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், இது குறித்து கருத்து பெற்று தெரிவிப்பதாக கூறினார்.
ரோத்தகி மேலும் கூறுகையில், ஒருவருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. கருணை மனு மீது உரிய காலத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. ராஜோன்னா இந்திய குடியுரிமை பெற்றவர். இது ஒன்றும் இந்தியா பாகிஸ்தான் விவகாரம் அல்ல என்றார்.
நீதிபதிகளிடம், குற்றத்தின் தன்மை குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன் விளக்கமளித்தார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: இன்னும் குற்றவாளியை தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? இதற்கு யாரை குறை சொல்வது. தண்டனைக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. குற்றவாளி கருணை மனு தாக்கல் செய்யவில்லை. அவரது சார்பில் குருத்வாரா குழு தான் மனு தாக்கல் செய்துள்ளது எனக்கூறி விசாரணையை அக்.,15க்கு ஒத்திவைத்தனர்.