இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்: எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து பியூஷ் கோயல் கருத்து
இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்: எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து பியூஷ் கோயல் கருத்து
ADDED : செப் 24, 2025 09:45 PM

வாஷிங்டன்: '' இந்தியாவில் திறமைசாலிகளும், புதுமைகளும் அதிகளவில் உருவாகிறது,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
எச்1பி விசா கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: ஏராளமான திறமைசாலிகளையும், புதுமைகளையும் இந்தியா உருவாக்குகிறது. இதனால், இந்திய பொறியாளர்கள் மற்றும் பட்டதாரிகள் உலகளவில் புகழ்பெற்று வருகின்றனர். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு தீர்வு வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி திட்டங்களை ஊக்கப்படுத்தவும், புதிய ஆராய்ச்சி, மே்மபாடு மற்றும் புதிய யோசனைகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்தியாவின் ஸ்டார்ட் அப் அமைப்பு மிக துடிப்புடன் உள்ளது. ஏராளமான நிறுவனங்கள், தங்களது பாரம்பரியமான வளங்களை தாண்டி புதிய கொள்கைகளில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.