இரு நாட்டு உறவை சீர்குலைத்த டிரம்ப் ஆலோசகர்: சசி தரூர் கவலை
இரு நாட்டு உறவை சீர்குலைத்த டிரம்ப் ஆலோசகர்: சசி தரூர் கவலை
ADDED : செப் 23, 2025 07:01 PM

புதுடில்லி: டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்த தாறுமாறான கருத்துக்களே, இரு நாடுகள் இடையிலான உறவு சீர் குலைவுக்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகள் மேம்பட்டு வரும் நிலையில், இந்தியாவை குறிவைத்து சமீபத்தில் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவை சசி தரூர் விமர்சித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகரான பீட்டர் நவரோ, இந்தியாவை வரிகளின் மகாராஜா என்றும், ரஷ்யாவை சலவைத் தொழிற்சாலை என்றும் விமர்சித்து இருந்தார். அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்தும் பல்வேறு விமர்சனங்களை பீட்டர் நவரோ முன் வைத்தார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியதாவது: நவரோ பேச்சு, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சீர்குலைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டு வரும் நேரத்தில் அவரது இந்த விமர்சனம் தேவையற்றது.
இது மிகவும் புண்படுத்தும் வகையில் இருந்தது. உறவில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவைப் பற்றி நீங்கள் ஏன் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர்? இவ்வாறு சசிதரூர் கூறினார்.