மாஜி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ரூ.7.44 கோடி சொத்து; பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
மாஜி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ரூ.7.44 கோடி சொத்து; பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
ADDED : செப் 23, 2025 06:58 PM

புதுடில்லி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான சத்யேந்தர் ஜெயினின் ரூ. 7.44 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த 2015- 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆம் ஆத்மி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றியபோது, சத்யேந்தர் ஜெயின் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார்கள் வந்தன.
அவர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த ஊழல் வழக்கில் சத்யேந்தர் ஜெயின் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சத்யேந்தர் ஜெயினின் ரூ. 7.44 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.12.25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி முன்னாள் அமைச்சர் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக உள்ளது.