மக்கள் தொகை 146 கோடி ; வருமான வரி செலுத்துவதோ 3 கோடி பேர் மட்டுமே: கருத்து சொல்லுங்க வாசகர்களே!
மக்கள் தொகை 146 கோடி ; வருமான வரி செலுத்துவதோ 3 கோடி பேர் மட்டுமே: கருத்து சொல்லுங்க வாசகர்களே!
UPDATED : செப் 23, 2025 06:55 PM
ADDED : செப் 23, 2025 06:11 PM

சென்னை: மொத்த மக்கள் தொகையான 146 கோடி பேரில் 3 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இது குறித்து வாசகர்கள் தங்களது கருத்துக்களை, வாசகர்கள் கருத்துப் பகுதியில் பதிவு செய்யலாம்.
இந்தியாவில் தனி நபர், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் வருமானங்களுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டியது கட்டாயம். தற்போது, ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் செலுத்தும் வரி தான் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆகும் செலவில் முக்கிய அம்சமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 146 கோடி மக்கள் தொகையில் இந்த ஆண்டு 9.19 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், இது கடந்த ஆண்டை காட்டிலும்( 8.52 கோடி பேர்) அதிகம் ஆகும்.
இந்தாண்டு கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா முதலிடத்திலும், உ.பி., இரண்டாம் இடத்திலும் குஜராத் 3 ம் இடத்திலும், ராஜஸ்தான் 4வது இடத்திலும், தமிழகம் 5வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரம் வெளியாகி உள்ளன.
அதன்படி,
இந்தியாவின் மக்கள் தொகை -146 கோடி பேர்
பான் கார்டு வைத்து உள்ளவர்கள் - 78 கோடி பேர்
ஆதாருடன் பான் கார்டை இணைத்தவர்கள் - 60 கோடி பேர்
தற்போது வருமான வரி விதிப்புக்குரியவர்கள் -13 கோடி பேர்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 9 கோடி பேர்
பூஜ்ஜியம் வரி தாக்கல் செய்தவர்கள் - 6 கோடி பேர்
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை - 3 கோடி மட்டுமே.