பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ
பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ
UPDATED : செப் 23, 2025 10:39 PM
ADDED : செப் 23, 2025 05:41 PM

திருநெல்வேலி: கூடங்குளத்தில் நிலம் பட்டா மாறுதலுக்கு ரூ 25,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த பாஸ்கர் மனைவி விஜயா. பாஸ்கரின் தந்தை அய்யங்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தை தனது கணவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய விஜயா விண்ணப்பித்தார்.
பட்டா பெயர் மாற்றத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி ஸ்டால்வின் ஜெயசீலன் ரூ 30,000 லஞ்சம் கேட்டார். பின்னர் 5 ஆயிரத்தை குறைத்துக் கொண்டு ரூ 25 ஆயிரம் ஆவது கண்டிப்பாக தரவேண்டும் என கூறினார்.
லஞ்சம் தர விரும்பாத விஜயா இது குறித்து திருநெல்வேலியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்பி மெஸ்கலரின் எஸ்கால் அலுவலகத்தில் புகார் செய்தார். எஸ்பி தலைமையில் போலீசார் கூடங்குளம் விஏஓ அலுவலகத்தில் காத்திருந்தனர்.
விஜயா கொடுத்த ரூ.25 ஆயிரத்தை வாங்கிய விஏஓ கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கைதான விஏஓ ஸ்டால்வின் ஜெயசீலன் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர். இவர் கூடங்குளத்தில் 11 ஆண்டுகளாக தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கூடங்குளத்தில் அவர் வசிக்கும் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.