பிரதமர் தாயை இண்டி கூட்டணி அவதூறு செய்ததற்கு கண்டனம்: செப்.4ல் தேஜ கூட்டணி பந்த் அறிவிப்பு
பிரதமர் தாயை இண்டி கூட்டணி அவதூறு செய்ததற்கு கண்டனம்: செப்.4ல் தேஜ கூட்டணி பந்த் அறிவிப்பு
ADDED : செப் 03, 2025 10:27 AM

பாட்னா: பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இண்டி கூட்டணியை கண்டித்து செப்.4ல் தேஜ கூட்டணி பீஹாரில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பீஹார் மாநில பாஜ தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது;
மாநிலம் தழுவிய இந்த முழு அடைப்பு போராட்டம் செப்.4ம் தேதி அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகள் குறிப்பாக மருத்துவ சிகிச்சைகள், ரயில் போக்குவரத்து எப்போதும் போல் இருக்கும்.
இந்த போராட்டத்தை பீஹார் மாநில பாஜ மகளிர் அணி முன்னின்று நடத்தும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த அறிவிப்பை அடுத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் உமேஷ் குஷ்வாஹா கூறியதாவது;
தர்பங்காவில் எதிர்க்கட்சிகள் பேரணியின் போது அநாகரீமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அரசியல் ரீதியாக மட்டுமல்ல அனைவரின் பார்வையிலும் இது முழுக்க, முழுக்க தவறு என்றார்.