அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது: டிரம்ப் மீண்டும் புலம்பல்
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது: டிரம்ப் மீண்டும் புலம்பல்
ADDED : செப் 03, 2025 11:01 AM

வாஷிங்டன்: அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் இந்தியாவுடன் நன்றாக பழகுகிறோம். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது. பல ஆண்டுகளாக உறவு ஒருதலைப்பட்சமாக இருந்தது. பல ஆண்டுகளாக வர்த்தக உறவுவு நியாயமற்றதாக இருந்தது. ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு அங்கு 200% வரி விதிக்கும் போது எப்படி அதனை விற்பனை செய்ய முடியும்?
அதனால் அந்த நிறுவனம் இந்தியா சென்று வாகனங்களை தயாரிக்கிறது. இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தைக்குள் சுதந்திரமாக நுழைகின்றன. வலுவான ராஜதந்திர உறவை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இரு தரப்பினரும் ஒரே மாதிரியான விதிகள் படி செயல்பட வேண்டும்.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போரை உருவாக்கியிருக்கிறது. ஆனால் 50 சதவீத வரியை திரும்ப பெறும் எண்ணமில்லை. இந்தியா உறவு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. இந்திய இறக்குமதி பொருள்கள் மீது இத்தனை ஆண்டுகளாக முட்டாள்தனமாக அதிக வரி விதிக்காமல் இருந்துவிட்டோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.