டெக்னிக்கல் அனாலிசிஸ் : 'டிரெண்டு' மாறுவதை உறுதிப்படுத்தும் சிக்னல்கள் தென்படவில்லை
டெக்னிக்கல் அனாலிசிஸ் : 'டிரெண்டு' மாறுவதை உறுதிப்படுத்தும் சிக்னல்கள் தென்படவில்லை
UPDATED : மே 19, 2026 01:22 AM
ADDED : மே 19, 2026 01:15 AM

நிப்டி
நேற்றைய வர்த்தகத்தில் இறக்கத்துடன் துவங்கிய நிப்டி, முற்பகலில் 325 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது. பின்னர், சிறிது சிறிதாக மீண்டு நாளின் இறுதியில் 6 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது.
18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், ' நிப்டிமிட்கேப்50 குறியீடு' குறைந்தபட்சமாக 0.07 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப்250 குறியீடு' அதிகபட்சமாக 1.49 சதவீதமும் சரிந்து முடிந்தன.
21 துறை சார்ந்த குறியீடுகளில் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும், 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஐ.டி., குறியீடு' அதிகபட்சமாக 2.43 சதவீத உயர்வுடனும், 'நிப்டி மீடியா குறியீடு' அதிகபட்சமாக 2.24 சதவீத சரிவுடனும் காணப்பட்டன.
![]() |
வர்த்தகம் நடந்த 3,414 நிறுவனங்களின் பங்குகளில் 940 அதிகரித்தும், 2,381 குறைந்தும், 93 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன. நிப்டி தொடர்ந்து முக்கிய குறுகிய மற்றும் மத்திம கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
ஸ்டோக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர்கள் ஒரு புல்பேக் வருவதற்கு சாதகமாக இருக்கிறபோதிலும், எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., இறக்கம் வருவதற்கு சாதகமான சூழ்நிலையிலேயே இருக்கின்றன. 23,850ல் உடனடி ரெசிஸ்டென்ஸும், 23,300-ல் உடனடி சப்போர்ட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது.
23,900 - 24,000 லெவல்களை தாண்டாதவரை நிப்டியில் தற்காலிகமாக இறக்கம் நின்றுவிட்டது என்று கூட கூறமுடியாது. தற்போதைக்கு டிரெண்ட் ரிவர்சலை உறுதிப்படுத்தும் தெளிவான சிக்னல்கள் இன்னும் உருவாகவில்லை.

