PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை கிராமத்தில், அறுவடை செய்த நெல்மணிகள் நீண்ட நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் இருந்தன. விவசாயிகள் புகாரை அடுத்து, திருவள்ளூர் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., மருத்துவர் அருண்குமார் நேரில் வந்து பார்வையிட்டார்.
அப்போது, விவசாயிகளிடம் குறைகளை கேட்ட அவர், உடனடியாக வேளாண் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர், நெல்லின் தரம் மற்றும் ஈரப்பதம் குறித்து, விவசாயிகளிடம் நிதானமாக கேட்டறிந்தார்.
இதை பார்த்த மூத்த விவசாயி ஒருவர், 'புது எம்.எல்.ஏ., முதல் சந்திப்பிலேயே, நம்ம குறைகளை கேட்டு வேகமாக நடவடிக்கை எடுத்து, நம்ம மனசை தொட்டுட்டாரு பா...' என கூற, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.
