PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, மதுரையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கல்வி சான்று குறித்த சர்ச்சை, ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் தி.மு.க., கூட்டணி கட்சிகள், தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், 'தெரியாது, நோ ரியாக் ஷன், 6 மாதங்கள் கழித்து தான் விஜய் ஆட்சி குறித்து பதில் சொல்வேன்' என, பலவிதமாக பேசி சமாளித்தார்.
விஜய் கட்சி குறித்தோ, அவரது ஆட்சி குறித்தோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'வைகோவை, வீடு தேடி போய் விஜய் பார்த்ததுல இருந்து, இவரது அரசியலே மாறிடுச்சே... குழந்தைகள், இளைஞர்களை தான் விஜய் கவர்ந்தாருன்னு பார்த்தா, இவரை மாதிரி சீனியர்களையும் ஈர்த்துட்டாரே பா...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடி கலைந்தனர்.
***
