PUBLISHED ON : மே 15, 2026 12:53 AM

திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில், 'சிரிப்போம், சிந்திப்போம்' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது.
இதில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசுகையில், 'நம் வீட்டு பிள்ளைகளிடம், 'எங்க ஆபீஸ் மேனேஜர் வர்றாரு... சிரிக்கக் கூடாது'ன்னு சொல்லுவோம். ஆனா, கரெக்டா மேனேஜர் வர்றப்போ சிரிப்பாய்ங்க பாருங்க. அது மட்டுமில்லாம, சில நேரங்கள்ல நம்மகிட்டயே வந்து, இது தானப்பா அந்த லுாசு மாமான்னு கேட்டுருவாங்க...
'சின்ன பசங்கள சிரிப்ப அடக்க சொல்லி பாருங்க. சிரிப்ப அடக்கி முகம் சிவந்து போகும். அந்த முகம் இன்னும் அழகாக இருக்கும்...' என்றார்.
இதை கேட்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'இவர் சொல்றது நுாத்துக்கு நுாறு உண்மைதான். இந்த கால வாண்டுக கிட்ட மட்டும் சிரிக்கக் கூடாதுன்னு சொல்லி பாருங்க... சிரிச்சு சிரிச்சே நம்ம மானத்தை வாங்கிடுவாங்க...' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
