PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

நீலகிரி மாவட்டம், ஊட்டி தொகுதியில், அ.தி.மு.க ., கூட் டணியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் போஜராஜன் வெற்றி பெற்றார். தொகுதிக்கு அறிமுகமில்லாத த.வெ.க. , வேட்பாளர் இப்ராஹிம், 976 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். தி.மு.க., கூட்டணியில் போட்டி யிட்ட காங்., மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
பா.ஜ.,வின் போஜராஜன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, ஊட்டியில் சமீபத்தில் பேரணி நடத்தினார். இதில் பங்கேற்ற பா.ஜ., தொண்டர் ஒருவர், 'ஊட்டி தொகுதியை, தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சிகளுமே, கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்டன. இதுல, நம்ம கட்சி ஜெயிச்சிடுச்சு...' என கூற, சக தொண்டரோ, ' தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., விலகிட்டதால, அடுத்த தேர்தல்ல தி.மு.க.,வே போட்டியிட்டா நம்ம வெற்றிக்கு சிக்கலாகிடாதா...' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதலாவது தொண்டர், 'அதுக்கு அஞ்சு வருஷம் இருக்கே... இப்பவே, 'டென்ஷன்' ஆகாத...' என்றபடியே பேரணியில் நடந்தார்.
