/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் நவராத்திரி விழா கோலாகலம்
/
அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் நவராத்திரி விழா கோலாகலம்
அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் நவராத்திரி விழா கோலாகலம்
அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் நவராத்திரி விழா கோலாகலம்
செப் 26, 2025

அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மூன்றாம் நாள் விழாவின் போது தேவி, அம்மன் உருவில் பூஜைகளை ஏற்று கோயிலை வலம் வந்தார்.
நிகழ்வில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த சாரங்கன், ஜெய்சங்கர், அமெரிக்காவைச் சேர்ந்த சிந்துஜன் ஆகியோர் வழங்கிய நாதஸ்வர இசை அனைவரது மனதையும் கவர்ந்தது. இசை ஆசிரியரான வீணா அவர்கள் பஞ்சபுராணத்திலிருந்து (தேவாரம், திருவாசகம், திருவிசைபா, திருபல்லாண்டு, பெரியபுராணம் பாடல்களையும் திருப்புகழ் பாடல்களையும் பாடி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார்.
இந்த நிகழ்வின் போது 200க்கும் மேற்பட்ட அடியார்கள் குழுமியிலிருந்து அம்மனின் அருளைப் பெற்றனர்.
அனைவருக்கும் இறுதியில் உணவு பரிமாறப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
--- நமது செய்தியாளர் முனைவர் மெய் சித்ரா.
Advertisement