/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
கட்டணமில்லா திருக்குறள் செயலி வெளியீடு
/
கட்டணமில்லா திருக்குறள் செயலி வெளியீடு
செப் 27, 2025

டொரோண்டோ : கனடாவில் டொரோண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 6வது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் இரண்டாம் நாளில் செப்-20, திருவள்ளுவர் அரங்கில் மருத்துவர் செந்தில் சேரன் மற்றும் பேராசிரியர் இல. சுந்தரம் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இலக்கணக் குறிப்புகளுடன் கூடிய கட்டணமில்லா திருக்குறள் செயலி Thirukkural App (www.kural.app) வெளியிடப்பட்டது.
செயலியை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைப் பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு வெளியிட்டு வாழ்த்துரையையும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப் பீடத்தின் பீடாதிபதி (Dean) கலாநிதி வ. குணபாலசிங்கம் கருத்துரை வழங்கினார்.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் சிவன் இளங்கோ, முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், முனைவர் ஜி. ஜான் சாமுவேல், சுப்பிரமணியம் இராசரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் செந்தில் சேரன் சூம் வழியாக இணைந்து செயலி உருவான விதம் பற்றி கூறினார்.
முனைவர் இல. சுந்தரம் கட்டணமில்லாச் செயலியை (App) நிறுவிப் பயன்படுத்தும் முறையைச் செயல்விளக்கத்தின் (Demo) மூலம் காட்டினார்.
--- கனடாவில் இருந்து நமது வாசகர் , முனைவர் இல. சுந்தரம்
Advertisement