
ரியாத்: சவூதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு, ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - கர்நாத கிளை, கிங் சவூத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கியுடன் இணைந்து, 26வது மாபெரும் இரத்த தான முகாம் 19 செப்டம்பர் 2025, வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை கிங் சவூத் இரத்த வங்கி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய தூதரக அதிகாரி பிரவீன் குமார் (இரண்டாம் செயலாளர் - இறப்பு பிரிவு) மற்றும் இந்திய தூதரக ஒருங்கிணைப்பாளர் ஏர்வாடி முகைதீன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
அறிவிப்பு செய்த உடனேயே IWF அணி மேற்கொண்ட அயராத உழைப்பும் தொடர்ச்சியான அழைப்பு பணியும், இறைவனின் அருளால் ரியாத்தின் பல பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
இரத்த தான முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், ஜூஸ், பழங்கள் மற்றும் பரிசுப் பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- ரியாத்திலிருந்து நமது வாசகர் ஆரிப் அப்துல் சலாம்
Advertisement