/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
புதுச்சேரி கல்லூரியில் பயின்றவருக்கு அமெரிக்காவில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பு

செப் 04, 2025

புதுச்சேரி கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் விஜய் ராஜி OpenAI-யின் புதிய 'CTO of Applications' ஆகிறார் .
அமெரிக்கா/சியாட்டில்; புதுச்சேரி பொறியியல் கல்லூரி (PEC) முன்னாள் மாணவர் விஜய் ராஜி, OpenAI நிறுவனத்தின் 'CTO of Applications' (பயன்பாடுகள் பிரிவு தலைமை தொழில்நுட்ப அதிகாரி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, ராஜி நிறுவிய தயாரிப்பு பரிசோதனை தளம் Statsig-ஐ OpenAI $1.1 பில்லியன் மதிப்பிலான முழு பங்கு (all-stock) ஒப்பந்தத்தில் கையகப்படுத்துகிறது.
OpenAI வெளியிட்ட அறிவிப்பில், “உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு A/B Testing, Feature Flagging, ரியல்-டைம் முடிவெடுப்பு ஆகியவற்றில் நம்பகமான தளமாக உள்ள Statsig எங்களைச் சேர்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ராஜி, OpenAI பயன்பாடுகள் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி பிட்ஜி சிமோ அவர்களின் கீழ் நேரடியாக பொறுப்பேற்கிறார்.
இந்த ஒப்பந்தம் கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதிக்கு உட்பட்டது. கையகப்படுத்தல் நிறைவு பெற்ற பின்பும் Statsig தனது சியாட்டில் அலுவலகத்திலிருந்தே தற்போதைய வாடிக்கையாளர்களை சேவையளிக்கும்; அனைத்து பணியாளர்களுக்கும் OpenAI-யில் இணையும் விருப்பம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் ராஜி, 1995-1999 காலகட்டத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ECE) துறையில் புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் கல்வி கற்றவர். அக்கல்லூரி இன்று புதுச்சேரி டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகம் (PTU) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விஜய் ராஜியின் சாதனை, புதுச்சேரி மற்றும் இந்தியத் தொழில்நுட்ப உலகுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகக் கல்வியாளர், தொழில்துறை வட்டாரங்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றன.
---நமது செய்தியாளர் - முருகவேலு வைத்தியநாதன்.
Advertisement
Advertisement
நல்லவேளை புதுச்சேரி இல்லை என்றால் ...தான் காரணம் என்று உருட்டிட்டு இருப்பானுங்க
Rate this
நல்லவேளை புதுச்சேரி இல்லை என்றால் ...தான் காரணம் என்று உருட்டிட்டு இருப்பானுங்க
Rate this
Advertisement