/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" மாதாந்திர விழா
/
சிங்கப்பூரில் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" மாதாந்திர விழா
சிங்கப்பூரில் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" மாதாந்திர விழா
சிங்கப்பூரில் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" மாதாந்திர விழா
செப் 14, 2025

'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் 95ஆவது மாதாந்திர நிகழ்ச்சி செப்-13 (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு சிங்கப்பூர் பொங்கோல் சமூக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
'மூப்பில்லா முதல்மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தமிழன்னைக்கு வரவேற்பு நடந்தது. பொதுப் பிரிவில், தமிழோவியா அருள்பிரகாஷ் 'பொம்மா பொம்மாதான்' என்ற பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடினார். சென்னையிலிருந்து இணையம் வழியாக ஆராத்யா பங்கேற்று சில பாடல்களைப் பாடினார்.
அதனை தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர் நபிஹா ள் மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற நேரில் மற்றும் இணையம் வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப்பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, மறைந்த சிங்கப்பூரின் மூத்த சமூக அடித்தளத் தலைவர் தமிழ்நெஞ்சர் டாக்டர் NR. கோவிந்தன் PBS, PBM, BBM அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நன்னெறிக் கதை - பாடல்
சிறுவர்கள் அங்கத்தில், மாதவ வீரா நன்னெறிக் கதை கூறினார். தமிழோவியா அருள்பிரகாஷ் 'சங்க கால மலர்கள்' பெயரைக் கூறினார். மேகவர்தினி அருள்பிரகாஷ் 'நன்னெறி பாடல்' சிலவற்றைப் பாடினார். திலிபன் ஜோவின் ஆரவ் சிறுவர் உரையாற்றினார்.
தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய அறிமுகவுரையில் 'அடி' என்னும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகளுடன் அழகுற பேசினார்.
அதனை தொடர்ந்து 'தமிழ் இலக்கியங்களில் குல குறியியல்' என்னும் தலைப்பில் சிறப்புரை இடம்பெற்றது. இதில் மாமல்லபுரம் தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் ஏ. ராஜ்மோகன் அவர்கள் சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் இருந்து குல குறியியல் பற்றி பல மேற்கோள்களைக் காட்டினார்.
நிகழ்ச்சி முழுவதும் காணொளியாக முகநூல் வழி நேரலையாகவும் ஒளிபரப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சி பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, சங்கீதா குணசீலன் மற்றும் ஜெயராஜன் சுகந்தி இருவரும் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். மோகனபிரியா ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் மறவாமல் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து இரவு சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
முகநூலில் கண்டுகளிக்க:
www.facebook.com/share/v/19TZbHsW9X/
அமைப்பின் இணையப்பக்கம்:
www.ilakkiyapozhil.com
சிங்கப்பூரிலிருந்து நமது தினமலர் வாசகர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி.
Advertisement