/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை
/
சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை
சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை
சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை
செப் 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு பண்டிகையையும் பன்முகக் கலாச்சாரமாகக் கருதி ஒன்றிணைந்து கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் வழிமுறை. இது போல் தீபாவளி ஒளியூட்டு விழா கடந்த செப்-6 ஆம் தேதி துவங்கியது.
லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பங்கேற்றார். விழாவில் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத் தலைவர் சுரேஷ்குமார் “ அதிபர் சவால் “ திட்டத்திற்கு நன்கொடையாக ஆலயத்தின் சார்பாக ஒரு லட்சம் வெள்ளி காசோலையை பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
--- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன் .
Advertisement