
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட் : லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் விக்சிட் பாரத், மேம்பட்ட இந்தியா எனும் கருப்பொருளில் ஓட்ட போட்டி
நடந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக யோகா பயிற்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் ஷேக் தலைமை வகித்தார்.
லெபனான் நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி
டாக்டர் நோரா பக்ரக்டரியன், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி
டாக்டர் அமெர் பிசாத், பெய்ரூட் கவர்னர் மர்வான் அபூத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முதல் இருபது இடங்களை பெற்றவர்களுக்கு தூதர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
--- நமது தினமலர் செய்தியாளர் காஹிலா .
Advertisement