
ஷார்ஜா: ஷார்ஜா மரயா கலை மையத்தின் சார்பில் பாலஸ்தீன நாட்டின் எம்பிராய்டரி தொடர்பான கலைக்கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை ஷார்ஜா முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஹமது அல் கசீர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
துணிகளை தைக்க உதவும் நூல்களின் மூலம் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமெர் சோமாலி, அப்தெல் ரஹ்மான் கதனானி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களின் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது.
ஷார்ஜா அல் கஸ்பா பகுதியில் உள்ள மரயா கலை மையத்தில் இந்த கண்காட்சியை பொதுமக்கள் அடுத்த ஆண்டு 2026 ஜனவரி மாதம் 5 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலவசமாக பார்வையிடலாம்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement