/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத் இந்தியா சங்கம் (RIA) - 25வது ஆண்டு விழா
/
ரியாத் இந்தியா சங்கம் (RIA) - 25வது ஆண்டு விழா
செப் 15, 2025

ரியாத் இந்தியா சங்கம் (RIA) - 25வது ஆண்டு விழா
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் இந்தியா சங்கம் (RIA) - 25வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
ரியாத்தில் செயல்படும் முன்னணி சமூக சேவை அமைப்பான ரியாத் இந்தியா சங்கம் (RIA) தனது 25வது ஆண்டு (வெள்ளி) விழாவை டியூன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கொண்டாடியது.
RIA தலைவர் உம்மர்குட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, ரியாத் இந்திய தூதரக துணைத்தூதர் டாக்டர் அபு மதன் ஜார்ஜ் துவக்கி வைத்தார். செயலாளர் அருண் குமரன் வரவேற்புரையாற்றினார், இப்ராஹிம் சுபுஹான் வாழ்த்துரை வழங்கினார்.
RIA முன்னாள் தலைவர் மாதவன் சுந்தரராஜ் தலைமையில் ரியாத் பள்ளிகள் இடையேயான மாணவர்களுக்கான வினாடி வினா இறுதிப்போட்டி நடைபெற்றது.
ரியாத்தில் சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு RIA அமைப்பு விருதுகள் வழங்கி கௌரவித்தது. இவ்விருது ஷிஹாப் கொட்டுகாட், சந்தோஷ் பிரேம் வின்ஃப்ரெட், அகமது இம்தியாஸ், ஷைஜு பச்சா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
'சில்வரியா(SILVERIA)' என்ற டிஜிட்டல் மற்றும் கையேடு டியூன்ஸ் பள்ளி தாளாளர் திருமதி சங்கீதா அவர்களால் வெளியிடப்பட்டது, மேலும் RIA-வின் 25 ஆண்டுகால சாதனைகளை பதிவு செய்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக, இந்தியாவிலுள்ள நலிவடைந்த RIA முன்னாள் உறுப்பினர் குடும்பத்தினற்கு சுமார் 3,15,000ரூபாய் RIA மனிதநேய குழுவினால் வழங்கப்பட்டது.மேலும்,
தமிழ்நாடு புத்தூர் கிராம மக்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க 1.5 லட்சம் ரூபாய் காசோலை RIA மனிதநேய குழுவினால் வழங்கப்பட்டது.
வருகின்ற அக்டோபர் மாதம் RIA அமைப்பு நடத்த இருக்கும் கால்பந்து போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெர்சி இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
20 ஆண்டுகள் நிறைவு செய்த RIA உறுப்பினர்களுக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது. பிரபல பின்னணி பாடகர்கள் நிகில் மேத்யூ, சௌம்யா சனநாதனன், RIA உறுப்பினர்கள், ரியாத்தின் முக்கிய நடன பள்ளிகளுடன் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். RIA வெள்ளி விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இரவுணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
--- சவுதி அரேபியாவில் இருந்து நமது தினமலர் வாசகர் ஆரீப் அப்துல் சலாம்.
Advertisement