
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய் கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் பெருவிழா மீலாது விழாவாக கொண்டாடப்பட்டது. எழுத்தாளர் ஜமால் மதார் வரவேற்புரை நிகழ்த்தினார். நபிகளாரின் பெருமைகளை விளக்கும் வகையில் பாடல் மற்றும் மவ்லித் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முகம்மது பின் ராஷித் நூலகத்தின் நிர்வாகக்குழு தலைவர் முகம்மது அல் முர், கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்க நிர்வாகக்குழு தலைவர் பிலால் அல் புதூர், துணைத் தலைவர் அலி ஒபைத் அல் ஹம்லி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சலா அல் காசிம், நிதி இயக்குநர் ஜமால் அல் கயத், கலாச்சார குழு தலைவர் அல் பலாசி, வர்த்தக பிரமுகர் ஜமால் அல் குரைர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement