/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் (IISJ) சர்வதேச அறிவியல் அமைப்பு
/
ஜெத்தா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் (IISJ) சர்வதேச அறிவியல் அமைப்பு
ஜெத்தா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் (IISJ) சர்வதேச அறிவியல் அமைப்பு
ஜெத்தா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் (IISJ) சர்வதேச அறிவியல் அமைப்பு
செப் 10, 2025

ஜெத்தா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் (IISJ) நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் முன்னணி விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கல்வித் திறமையின் புதிய அத்தியாயமாக, IISJ சர்வதேச அறிவியல் மற்றும் மேம்பட்ட கல்வி, தொழில் முனைவு ஆலோசனைச் அமைப்பான International Scientific Society for Advanced Academic and Career Counselling (ISSAACC) ஐ துவங்கியது. இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள் உலகளாவிய அறிவியல் அனுபவம், நடைமுறை வழிகாட்டுதல் மற்றும் தொழில் ஆலோசனை பெறவுள்ளனர்.
நிகழ்ச்சி IISJ முதல்வர் டாக்டர் முகமது இம்ரான் வழங்கிய வரவேற்புரை மூலம் துவங்கியது. அவர் ஆர்வமிக்க கல்வியின் முக்கியத்துவத்தையும் எதிர்கால நோக்கம் உள்ள மேடைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக, ISSAACC நிறுவனர் இயக்குநரும் IISJ நிர்வாக குழு உறுப்பினருமான டாக்டர் பிரின்ஸ் முஃப்தி ஜியா, மாணவர்கள் அறிவியல் மீதான ஆர்வத்தை புதுமையான கண்டுபிடிப்புகளாக மாற்றி சமூகத்திற்கும் தேசத்திற்கும் முன்னேற்றத்தை தரும் வகையில் அமைப்பின் நோக்கம் வெளிப்படுத்தினார்.
ISSAACC இன் தலைமை வழிகாட்டி பேராசிரியர் அன்வர் பில்கிராமி, மாணவர்கள் அறிவியல் உணர்வு வளர்த்து, தங்கள் படைப்பாற்றலை அர்த்தமுள்ள மாற்றங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கோரினார்
ISSAACC இன் முக்கியத்துவத்தை ஊடக மற்றும் தொடர்பு ஆலோசகர் அப்துல் கஃபூர் தானிஷ் விளக்கி, மருத்துவம் போன்ற பாரம்பரிய பாதைகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு தொழில்களில் மாணவர்கள் முன்னேற வேண்டும் எனக் கூறினார். நிதி ஆலோசகர் நூருத்தீன் கான், இளம் இந்தியர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் உலக முன்னேற்றத்தில் சுறுசுறுப்பான பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லக்னோ இன்டிக்ரல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜாவேத் முஸ்ரத், மாணவர்கள் பெரிய கனவு காண, தங்களின் தொழில் பாதையை முன்னதாகவே தீர்மானிக்க, முழு கவனத்துடன் அதனை பின்பற்ற வேண்டும் எனத் ஆலோசனை வழங்கினார்.
இந்தியத் தூதரகத்தின் வணிகத் தூதர் முகமது ஹாஷிம், துணை தூதர் ஃபஹத் அஹ்மத் கான் சூரியின் செய்தியை வழங்கினார். அவர், IISJ இன் இந்த தொலைநோக்கு பார்வையுடன் கூடிய முயற்சியை பாராட்டி, இந்திய இளைஞர்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு தூதரகம் எப்போதும் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார்.
இந்திய பன்னாட்டு பள்ளி நிர்வாக குழு தலைவர் டாக்டர் முகமது அப்துல் சலீம் மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் முகமது ஷஃபீ, டாக்டர் நுஸ்ரத் கான், டாக்டர் பர்ஹீன் அமீனா தாஹா, டாக்டர் ஜுபைர் ஹமீத், டாக்டர் ஹேமலதா மகாலிங்கம் ஆகியோர் ISSAACC, IISJ க்கு மாற்றத்தை ஏற்படுத்தும் படியாகவும், ஜெத்தா இந்திய சமூகத்திற்கு பெருமையாகவும் இருக்கும் என்று பாராட்டினர்.
இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான ISSAACC இணையதளம் தொடங்கப்பட்டது டன், “யங் சயின்டிஸ்ட் பிரோக்ராம்” அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்ட ஆய்வு முன்மொழிவு களுக்காக சவூதி ரியால் 5,000 மானியம் அறிவிக்கப்பட்டது. உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் அடங்கிய ஆலோசகர்கள், IISJ மாணவர்களுக்கு வழிகாட்டுவதாக உறுதியளித்தனர்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement