/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் கே.ஜி கட்டிடம் புதுப்பிப்பு
/
ஜெத்தா இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் கே.ஜி கட்டிடம் புதுப்பிப்பு
ஜெத்தா இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் கே.ஜி கட்டிடம் புதுப்பிப்பு
ஜெத்தா இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் கே.ஜி கட்டிடம் புதுப்பிப்பு
செப் 04, 2025

ஜெத்தா
இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் (IISJ) உடைய குழந்தைகள் பள்ளி (KG)
கட்டிடம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான புதுப்பிப்பை கண்டுள்ளது.
இளம் மாணவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் சுத்தமான சூழலை உறுதி செய்யும்
வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புதுப்பிப்பு, நீண்ட காலமாக அவசியமாக
இருந்த ஒன்றாகும்.
காலப்போக்கில் பழுதடைந்த இந்த கட்டிடத்தில்,
மரக் கதவுகள் சேதமடைந்திருந்தன. மேலும், குளியலறைகள் குழந்தைகளின்
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான பெரும் சவாலாக இருந்தது.
இளம்
மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் கற்றலுக்கேற்ற சூழலை வழங்கும்
முக்கியத்துவத்தை உணர்ந்த பள்ளி நிர்வாக குழு தலைவர் டாக்டர். முகமது
அப்துல் சலீம் அவர்கள், IISJ மேலாண்மை குழுவுடன் இணைந்து, உயரதிகாரிகளின்
வழிகாட்டுதலின் கீழ், கோடை விடுமுறையின் போது கல்விச் செயல்பாடுகள்
பாதிக்கப்படாமல் இந்தப் புதுப்பிப்பை தொடங்கினார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு
இது நடந்துள்ளது.
புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, மரக் கதவுகள்
அனைத்தும் மாற்றப்பட்டு, பாதுகாப்பும் அழகிய தோற்றம் தரும் வகையில்
அலுமினிய கதவுகள் பொருத்தப்பட்டன. மேலும், பழுதடைந்த தரை மேற்பரப்புகள்
அகற்றப்பட்டு, வகுப்பறைகள், வழித்தடங்கள் மற்றும் முக்கியப் பகுதியில்
புதிய கற்கள் பதிக்கப்பட்டன. இதன் மூலம் பிரகாசமான, சுத்தமான, நீடித்த
சூழல் உருவாக்கப்பட்டது.
மேலாண்மை குழு உறுப்பினர் திரு.
பிரின்ஸ் ஜியா அவர்கள், “குளியலறை புதுப்பிப்பில் சிறப்பு கவனம்
செலுத்தப்பட்டது. அனைத்து உபகரணங்களும் மாற்றப்பட்டு, சுகாதாரம் மற்றும்
பாதுகாப்பு தர நிலைகளுக்கு ஏற்ப முழுமையாக மேம்படுத்தப்பட்டது” என்று
குறிப்பிட்டார்.
இந்தக் கட்டடத்தின் வெற்றிகரமான நிறைவிற்கு,
இந்தியாவின் மாண்புமிகு தூதரக தலைவர் . ஃபஹத் அகமது கான் சூரி
அவர்களின் முழுமையான ஆதரவும் வழிகாட்டுதலும் முக்கிய பங்காற்றின. அவரது
ஆழ்ந்த ஆர்வம், ஊக்கம், நிகரில்லா ஒத்துழைப்பு ஆகியவை இந்தக் கட்டடப்
பணிகளை அனைவருக்கும் திருப்திகரமாக நிறைவேற்றும் நம்பிக்கையை வழங்கின. . ஃபஹத் அகமது கான் சூரி கட்டிடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து
வைத்து, பின்னர் முழு கட்டிடத்தையும் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்ட
பணிகளின் தரத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
இந்த கே.ஜி
கட்டிடத்தின் மாற்றம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க
சூழலை உருவாக்கியுள்ளது. இந்தப் புதுப்பிப்பு, பாதுகாப்பும் கற்றலும்
முக்கியம் எனக் கருதும் ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் உறுதியான
அர்ப்பணிப்பை காட்டுகிறது.
---நமது செய்தியாளர் , எம்.சிராஜ்.
Advertisement