/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி மௌலித் கமிட்டியின் மீலாது, மௌலித் மஜ்லிஸ்
/
அபுதாபி மௌலித் கமிட்டியின் மீலாது, மௌலித் மஜ்லிஸ்
செப் 03, 2025

அபுதாபி: அபுதாபி மௌலித் கமிட்டியின் புனிதமிகு மீலாது மற்றும் மௌலித் மஜ்லிஸ் 03.09.2025 புதன்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை, கோடம்பாக்கம், புலியூர் ஜூம்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ்.எம்.எஸ். முஹம்மது உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலி பங்கேற்று உரை நிக்ழ்த்துகிறார்.மேலும் தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜூத்தீன் நபி புகழ் பாட இருக்கிறார்.
மௌலித் மஜ்லிஸ், சிறப்புரை, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் என தொடர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தப்ரூக் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க மௌலித் கமிட்டி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
--- நமது செய்தியாளர், காஹிலா .
Advertisement